/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மாணவியரால் அனைத்தும் சாத்தியம்'
/
'மாணவியரால் அனைத்தும் சாத்தியம்'
ADDED : அக் 16, 2024 12:16 AM

கோவை : முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி தின விழா, கோவை தனியார் கல்லுாரியில் கொண்டாடப்பட்டது.
விழாவில், அப்துல் கலாம் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில், ''புதிய இந்தியாவுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்க, மாணவிகள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். மாணவியரால் அனைத்தும் சாத்தியம்.
அப்துல் கலாமுடன் பயணித்த அனுபவங்கள் மறக்கமுடியாதவை. அவரது எளிமை, அவருடைய செயல்பாடுகள் எப்போதும் நினைவில் இருக்கும்.
மாணவியர் கருத்துான்றி ஆழமாக படித்தால், பிற துறைகளை விட கலை, அறிவியல், கல்லூரியில் பயில்வோரால் சாதிக்க முடியும். தெளிவாக புரிந்து படித்தால், எந்த பாடமும் எளிதே,'' என்றார்.