ADDED : செப் 18, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
கோவை: தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இ.வி.எம். பாதுகாப்பு அறையில் காலாண்டு தணிக்கை நேற்று நடந்தது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். இ.வி.எம்., வி.வி.பேட், கட்டுப்பாடு மற்றும் ஓட்டுப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேட்டில் உள்ள விவரங்களுடன் சரியாக உள்ளதா என சோதித்தனர்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ்குமார் பங்கேற்றனர்.
