/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி
/
முன்னாள் மாணவர்கள் சந்தித்து நெகிழ்ச்சி
ADDED : ஆக 20, 2025 09:52 PM
கோவை; சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளியில், 'நாம் மீண்டும் சந்திக்கும் விழா' என்ற பெயரில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1977 முதல் 2025 வரை பயின்ற, 800க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முன்னாள் தலைமையாசிரியர்கள் 10க்கும் மேற்பட்டோர், 30-40 முன்னாள் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி நாட்களை நினைவுகூர்ந்து, பகிர்ந்து கொண்டனர்.
துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்ந்து, நண்பர்களுடன் தங்கள் பள்ளி நாட்களை நினைவுகூர்ந்து, உரையாடி மகிழ்ந்தனர்.
ரூ.1 லட்சம் மதிப்பில் ஜெராக்ஸ் இயந்திரம் உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான பொருட்கள், பள்ளி மேம்பாட்டிற்கான நன்கொடைகளை, முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.