/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய ரோடு தோண்டியாச்சு: பணி துவங்குவது எப்போது?
/
பழைய ரோடு தோண்டியாச்சு: பணி துவங்குவது எப்போது?
ADDED : ஜன 31, 2024 10:58 PM
பொள்ளாச்சி- பொள்ளாச்சி நகராட்சி அருகே அமைந்துள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இப்பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதியதாக தார் ரோடு அமைப்பதற்காக தோண்டப்பட்ட ரோடுகளில் பணிகள் துவங்கப்படாமல் இருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மணியம்மை வீதி, ஏர்பதி நகர், அன்னை சத்யா வீதி, சக்தி கார்டன், மகாலட்சுமி நகர், விநாயகர் கோவில் வீதி, பாலு கார்டன், மாக்கினாம்பட்டி செல்லும் ரோடுகளில், தார் சாலை அமைப்பதாக கூறி தோண்டப்பட்டன.
ஆனால், பணிகள் இன்னும் துவங்கப்படாமல், 20 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. நடந்து செல்ல முடியாமல் வயதானோர், குழந்தைகள் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். பணிகளை உடனடியாக துவங்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.