/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆங்கில படைப்பாற்றல் போட்டியில் அபாரம்
/
ஆங்கில படைப்பாற்றல் போட்டியில் அபாரம்
ADDED : ஜூன் 25, 2025 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டம் சீரப்பாளையத்தில் செயல்பட்டு வரும், வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 46வது சஹோதயா ஆங்கில படைப்பாற்றல் போட்டி நேற்று நடந்தது.
பள்ளி இயக்குனர் சுதர்ஷன் ராவ், முதல்வர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த போட்டியில், மாணவ, மாணவிகள் நான்கு பிரிவுகளில் பங்கேற்று, தங்களின் ஆங்கில படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
மாணவர்களின் படைப்புகளை, 12 குழுக்கள் ஆராய்ந்து பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தனர். வெற்றிப் பெற்றவர்களை பள்ளி இயக்குனர் சுதர்ஷன் ராவ் பாராட்டி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை, வித்யா நிகேதன் பள்ளி பெற்றது.