/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பித்தலில் சிறப்பு பெற்றார்கள் விருது
/
கற்பித்தலில் சிறப்பு பெற்றார்கள் விருது
ADDED : ஜன 11, 2025 09:11 AM
கோவை : கோவை மாவட்டத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உட்பட, நான்கு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு காமராஜர் விருது வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய், உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.75 ஆயிரம், நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம், தொடக்க பள்ளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில், 2024-25ம் கல்வியாண்டில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட, ஆனைமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டணம் அரசு உயர்நிலைப் பள்ளி, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, நெகமம் தொடக்கப் பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, இதற்கான காசோலையை வழங்க, மசக்காளிபாளையம் பள்ளி தலைமையாசிரியை மைதிலி பெற்றுக்கொண்டார்.