/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் நிலைகள் மேம்பாட்டில் சிறப்பான பணி; வனிதா மோகனுக்கு 'குலபதி முன்ஷி' விருது
/
நீர் நிலைகள் மேம்பாட்டில் சிறப்பான பணி; வனிதா மோகனுக்கு 'குலபதி முன்ஷி' விருது
நீர் நிலைகள் மேம்பாட்டில் சிறப்பான பணி; வனிதா மோகனுக்கு 'குலபதி முன்ஷி' விருது
நீர் நிலைகள் மேம்பாட்டில் சிறப்பான பணி; வனிதா மோகனுக்கு 'குலபதி முன்ஷி' விருது
ADDED : நவ 09, 2024 12:11 AM

கோவை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு, குலபதி முன்ஷி விருது வழங்கப்பட்டது.
பாரதிய வித்யா பவன் கோவை கேந்திரா சார்பில், ஒவ்வொரு துறையில் மேலான பங்களிப்பு வழங்குவோருக்கு, கடந்த 1992ம் ஆண்டு முதல், பாரதிய வித்யா பவன் நிறுவனர் 'குலபதி முன்ஷி' பெயரில் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு விழா, பாரதிய வித்யா பவன் பள்ளியில் உள்ள பவன் அரங்கத்தில் நடந்தது. மாணவியரின் பக்தி இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. கோவை கேந்திரா செயலாளர் அழகிரிசாமி வரவேற்றார்.
பாரதிய வித்யா பவன் கோவை கேந்திர தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், ''சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளை மேம்படுத்துவதில், 'சிறுதுளி' அமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பாராட்டு சென்று சேர வேண்டும்,'' என்றார்.
'சிறுதுளி' நிர்வாக இயக்குனர் வனிதா மோகனுக்கு, சென்னை கார்போரண்டம் யுனிவர்சல் லிட்., தலைவர் முருகப்பன் விருது வழங்கினார். பாரதிய வித்யா பவன் நிர்வாக குழு துணை தலைவர் நாகசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வனிதா மோகன் பேசுகையில், ''முதலில் தடுப்பணை கட்டிய போது, நீர் நிறைந்து நிற்குமா என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இப்போது நாங்கள் ஏற்படுத்திய பல தடுப்பணைகளில் நீர் நிரம்பியிருக்கிறது, சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது,'' என்றார்.