/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிராக்டரில் அளவுக்கு அதிகமாக சோளத்தட்டு
/
டிராக்டரில் அளவுக்கு அதிகமாக சோளத்தட்டு
ADDED : பிப் 17, 2025 11:00 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், தற்போது மக்காச்சோளம் அறுவடை பணிகள் நடக்கின்றன. விளைநிலங்களில் காய்ந்த மக்காச்சோள தட்டை, கால்நடைகள் தீவனத்திற்காக விவசாயிகள் சேகரித்து, இருப்பு வைத்தும் பயன்படுத்துகின்றனர்.
இதற்காக, விளைநிலங்களில் இருந்து, டிராக்டர் வாயிலாக, சோளக்கதிர்களை அறுவடை செய்த தட்டை, அவரவர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். குறுக்கு சாலைகளில் உயரமாக சோளத்தட்டு பாரம் ஏற்றிச் செல்லும் போது, பின்னால் செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக, டிராக்டரையே அடையாளம் காண முடியாதவாறு, பாரம் ஏற்றி செல்வதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் பைக்கில் செல்வோர், திணறுகின்றனர். மின்பாதை குறுக்கிடும் பகுதியில், காய்ந்த மக்காச்சோளத்தட்டு பாரம் உரசினால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, அதிக சோளத்தட்டு, வைக்கோல் ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர்களைக் கண்டறிந்து, போலீசார் எச்சரிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

