/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கல்லூரியில் அசர வைத்த விளையாட்டு போட்டிகள்
/
ராமகிருஷ்ணா கல்லூரியில் அசர வைத்த விளையாட்டு போட்டிகள்
ராமகிருஷ்ணா கல்லூரியில் அசர வைத்த விளையாட்டு போட்டிகள்
ராமகிருஷ்ணா கல்லூரியில் அசர வைத்த விளையாட்டு போட்டிகள்
ADDED : மார் 23, 2025 11:07 PM

பெ.நா.பாளையம் : வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் உடற்கல்வியியல் துறை சார்பில் ஏழாம் ஆண்டு, முன்னாள் மாணவர் சங்க கோப்பைக்கான போட்டிகள் நடந்தன.
மாநில அளவிலான இப்போட்டியில், தமிழக அளவில் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியருக்கான பூப்பந்து போட்டி , கைப்பந்து போட்டி மற்றும் மாணவர்களுக்கான ஹேண்ட் பால் போட்டிகள் நடந்தன. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
போட்டிகளை, முன்னாள் மாணவர் தீபன் பாபு மற்றும் கல்லூரி துணை முதல்வர் கருப்புசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில், 14 அணிகள் கலந்து கொண்டன.
போட்டிகள், 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன. முதல் மற்றும் இரண்டாம் இடத்தை, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை எஸ்.என்.எஸ்., தொழில் நுட்ப கல்லூரி அணியும், பகிர்ந்து கொண்டன.
பெண்களுக்கான போட்டி
பெண்களுக்கான வாலிபால் போட்டியில், 7 அணிகள் பங்கேற்றன. முதல் அரை இறுதி போட்டியில் கே.பி.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரி அணி, கலைஞர் கருணாநிதி இன்ஜினியரிங் கல்லூரி அணியை, 2:0 என்ற நேர் செட்டில் வென்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரி அணியை, 2:0 என்ற நேர் செட்டில் வென்றது.
இறுதிப் போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., அணி, கே.பி.ஆர்., அணியை, 2:0 என்ற நேர் செட்டில் வென்று கோப்பையை வென்றது.
பெண்களுக்கான பூப்பந்து போட்டியில், முதலிடத்தை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை எஸ்.என்.எஸ்., தொழில் நுட்ப கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை சி.ஐ.டி., மற்றும் பி.ஏ., கல்லூரிகளும் பகிர்ந்து கொண்டன.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, முன்னாள் மாணவர் பாலச்சந்திரன், கார்த்திக் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.