sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிழக்குப்புற வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துங்கள்! மத்திய அமைச்சருக்கு தொழில் அமைப்பினர் ஒருமித்த கோரிக்கை

/

கிழக்குப்புற வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துங்கள்! மத்திய அமைச்சருக்கு தொழில் அமைப்பினர் ஒருமித்த கோரிக்கை

கிழக்குப்புற வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துங்கள்! மத்திய அமைச்சருக்கு தொழில் அமைப்பினர் ஒருமித்த கோரிக்கை

கிழக்குப்புற வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்துங்கள்! மத்திய அமைச்சருக்கு தொழில் அமைப்பினர் ஒருமித்த கோரிக்கை

1


ADDED : செப் 20, 2024 10:26 PM

Google News

ADDED : செப் 20, 2024 10:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவைக்கு மிக அத்தியாவசிய தேவையான, கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கோரி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, 'கொங்கு குளோபல் போரம்', 'கொடிசியா', 'சேம்பர் ஆப் காமர்ஸ்' மற்றும் 'சீமா' உள்ளிட்ட தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை நகரப் பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு, புறநகரில் வட்டச்சாலை ஏற்படுத்துவது மட்டுமே ஒரே தீர்வு.

முதல்கட்டமாக, பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி நரசிம்மநாயக்கன் பாளையம் வரை, 32.43 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது; இதில், முதல் 'பேக்கேஜ்' பணி நடந்து வருகிறது. இரண்டாவது 'பேக்கேஜ்' நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது.

இதேபோல், மதுக்கரையில் துவங்கி மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலுார், காரணம்பேட்டை, கணியூர், குன்னத்துார் வழியாக, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தினால், புறநகரில் சுற்றுவட்டச்சாலை உருவாகும்.

திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு


எந்தெந்த கிராமங்களில் எவ்வளவு நிலம் தேவை; கையகப்படுத்த வேண்டிய நிலம் எவ்வளவு என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, டில்லியில் உள்ள நிலம் கையகப்படுத்தும் கமிட்டியிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

நிதி ஒதுக்கீடு செய்து, இன்னும் அறிவிக்கப்படவில்லை. இச்சாலை அமைந்தால், மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோடுகளுக்கு, இணைப்பாக அமையும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, 'கொங்கு குளோபல் போரம்' துணை தலைவர் வனிதா மோகன், 'சேம்பர் ஆப் காமர்ஸ்' தலைவர் ராஜேஷ் லுந்த், 'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன், 'சீமா' தலைவர் மிதுன் ராமதாஸ் உள்ளிட்ட தொழில் அமைப்பினர், கடிதம் எழுதியுள்ளனர்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மற்றும் கோவை முதல் கரூர் வரையிலான ஆறுவழிச்சாலை திட்டம், 2016ல் முன்மொழியப்பட்டது; சாத்தியக்கூறு ஆய்வறிக்கை 2018ல் தயாரிக்கப்பட்டது.

கோவை, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், ரூ.7,565 கோடியில், 182 கி.மீ., துாரத்துக்கு இவ்விரு திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது.

ஒப்புதல் அளிக்க வேண்டும்


டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமையகத்தில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதில், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை தனியாக பிரித்தெடுத்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அடுத்த கட்டமாக, கரூர் முதல் கோவை வரையிலான ஆறுவழிச் சாலை அமைத்தால், 120 கி.மீ., துாரத்தை, ஒன்றரை மணி நேரத்தில், மக்கள் எளிதாக கடக்கலாம்.

தமிழகத்தின் மேற்குப்பகுதிக்கு மிகவும் பயனுள்ளது என்பதால், இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தொழில் அமைப்பினர் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us