/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
/
ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
ADDED : அக் 04, 2024 11:27 PM
கோவை : தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், அலுவலர் கூட்டமைப்பின் கோவை மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
கூட்டத்தில் வரும் 18ம் தேதி, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுக்கவுள்ள கையெழுத்து இயக்கத்தை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பு செயலர் செல்வம், மேற்கு மண்டல செயலர் அருளானந்தம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கோவை மாவட்ட தலைவர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.