/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நைட்டிங்கேல் நர்சிங் கல்லுாரியில் கண்காட்சி
/
நைட்டிங்கேல் நர்சிங் கல்லுாரியில் கண்காட்சி
ADDED : பிப் 08, 2025 05:55 AM

கோவை; கோவை மதுக்கரை, நைட்டிங்கேல் நர்சிங் கல்லுாரியில் உடற்கூற்றியியல் மற்றும் உடலியல் கண்காட்சி துவங்கியது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை துணைவேந்தர் நாராயணசாமி துவக்கி வைத்து பேசுகையில், ''இதுபோன்ற ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகள் வாயிலாக, நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு நோய் தடுப்பு மற்றும் வலி தணிப்பு சிகிச்சை வழங்க, மாணவர்களை தயார்படுத்தும் விதமாக அமையும்,'' என்றார்.
கண்காட்சியில் ஈரோடு, திருப்பூர், மற்றும் கோவையை சேர்ந்த, 36 கல்லுாரிகளில் இருந்து, 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நைட்டிங்கேல் கல்வி குழுமங்களின் தலைவர் மனோகரன் வரவேற்றார். கல்லுாரி செயலாளர்கள் ராஜீவ், சஞ்சய்மணி உட்பட பல்வேறு கல்லுாரிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகை வழங்கப்பட்டது.