/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வ.உ.சி. மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்
/
வ.உ.சி. மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்
ADDED : டிச 21, 2025 05:16 AM

கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில், வொண்டர் வேர்ல்டு சார்பில், பொருட்காட்சி துவங்கியது.
அவதார் திரைப்படத்தில் வரும் கற்பனை உலகம், ஜுராசிக் பார்க், மலர்க் காட்சி, அச்சுறுத்தி திகிலூட்டும் குகை, குதித்து கும்மாளமிட டி.ஜே., லேசர் ஷோ என 5 கருப்பொருட்களில் அரங்குகள் அமைந்துள்ளன.
ரூ.10 முதல் வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள், காலணிகள் என ஷாப்பிங் செய்வதற்கு ஏராளமான கடைகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், 25க்கும் மேற்பட்ட ராட்டின வகை விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. குளிரில் ஜில்லிட வைக்கும் பனி உலகமும் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சிக்கே உரித்தான டில்லி அப்பளம் உட்பட கொறித்து மகிழ உணவுகள் உள்ளன. தி.மு.க., மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் துவக்கி வைத்தார்.
பொருட்காட்சி அமைப்பாளர் அப்துல் கபூர் உட்பட பலர் பங்கேற்றனர். பொருட்காட்சி வரும் ஜன., 18ம் தேதி வரை, தினமும் மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும்.

