/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை தோட்டம் அமைக்க கண்காட்சி
/
பசுமை தோட்டம் அமைக்க கண்காட்சி
ADDED : செப் 28, 2025 08:13 AM

கோவை : சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, கோவை மாநகராட்சி சார்பில் குளக்கரைகள் உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பசுமை தோட்டங்கள் அமைப்பது மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த இரு நாள் விழிப்புணர்வு கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேற்று துவங்கியது.
வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைத்தல், வீட்டு வளாகத்தில் காலியாக உள்ள இடங்களில் செடி, கொடிகள், வளர்க்கும் முறை, இதுதொடர்பான உபகரணங்கள், உரங்கள், விதைகள், அலங்கார செடிகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியை, எம்.பி. ராஜ்குமார் துவக்கி வைத்தார். கலெக்டர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கண்காட்சி இன்றும் நடக்கிறது.