/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு
/
செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு
செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு
செயலிழந்த கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : டிச 09, 2024 10:49 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டும், பயன்பாடின்றி காணப்படுவதால், அவைகளை மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், முக்கிய சாலைகளில் அடிக்கடி சிறு விபத்துக்கள் மற்றும் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது.
சாலைகளில் போக்குவரத்து விதிமீறி செல்லும் வாகனங்கள், ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள், 'நோ பார்க்கிங்' பகுதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், நெரிசல் மற்றும் சிறு குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதனை சரி செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்த போதும், விதிமீறும் வாகன ஓட்டுனர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண, போலீசார் சார்பில் முக்கிய ரோடுகள் சந்திப்பு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், பஸ் ஸ்டாண்ட், குடியிருப்பு பகுதிகளில், நன்கொடையாளர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறையில் உள்ள 'டிவி'க்கள் வாயிலாக கண்காணிக்கப்பட்டும் வந்தன. ஆனால், தற்போது, பல இடங்களில் பொருத்தப்பட்ட கேமராக்கள், பயன்பாடின்றி காணப்படுகின்றன. சில இடங்களில் கேமராக்கள் உடைந்து தொங்குகின்றன. குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தற்போது, வீடு, பெரிய அளவிலான வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் கண்காணிப்பு கேமரா அமைத்துக் கொள்கின்றனர். நகரில், குற்றச் செயல்களைக் கண்டறிய பொருத்தப்பட்ட பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைப்பதில் தொய்வு ஏற்படுகிறது.
கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருப்பதை அறிந்து, குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு தைரியம் ஏற்படும். இதனை போலீஸ் அதிகாரிகள் உணர வேண்டும்.
பயன்பாடு இல்லாத கேமராக்களுக்கு மாற்றாக, புதிய கேமரா அமைக்க வேண்டும். அனைத்து கேமராக்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போது தான், குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் உதவும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.