தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காட்டுப்பன்றிகளால் சேதம்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

 காட்டுப்பன்றிகளால் சேதம்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

 காட்டுப்பன்றிகளால் சேதம்: நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 19, 2026 06:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: 'கேரளாவை போல தமிழகத்திலும், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி, அகழி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அவை வேளாண் நிலங்களை சேதப்படுத்தின. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் காட்டுப் பன்றிகளால் காயம் அடைந்தனர்.

இதையடுத்து அகழி, சோலையூர், தாவளம், கல்கண்டி, புதுார் மற்றும் சித்துார் ஆகிய இடங்களை சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து கேரள வனத்துறையினர், 44 காட்டு பன்றிகளை கடந்த வாரம் சுட்டுக்கொன்று புதைத்தனர். இதே போல தமிழகத்திலும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடாகம் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து விட்டது. இவைகள் மனிதர்களை எதிர்க்கும் குணம் உடையதால், இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்தினாலும், விவசாயிகள் அதை விரட்ட தோட்டத்துக்குள் செல்ல முடிவதில்லை.

ஏற்கனவே, தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தின் அடிப்படையில், வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழையும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல வனத்துறையினர் முன்வர வேண்டும். ஏற்கனவே யானைகள் தொந்தரவால் நலிவடைந்துள்ள விவசாயிகள், தற்போது காட்டு பன்றிகளின் தொல்லையால் ஒட்டுமொத்த விவசாய தொழிலை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us