/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடுதல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
/
கூடுதல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
கூடுதல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
கூடுதல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 31, 2025 10:16 PM
போத்தனூர்; கோவையில் மத்தியம், மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இங்கு தினமும் பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதியதாக எடுத்தல், புதுப்பித்தல், வாகனங்கள் பதிவு செய்தல், எப்.சி, பெயர் மாற்றம் என பலவித பணிகளுக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து, செல்கின்றனர்.
இதில் ஓட்டுனர் உரிமம் எடுத்தல், எப்.சி.,க்காக வாகனத்தை பார்வையிடுதல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பணிகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் அவசியம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இப்பணியை வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) மேற்கொள்வார்.
தற்போது ஆன்லைன் முறையில் இப்பணிகளுக்காக மக்கள் முன்பதிவு செய்கின்றனர்.
ஆனால், மேற்குறிப்பிட்டவைகளை, 90 சதவீத மக்கள் புரோக்கர்கள் மூலமாகவே மேற்கொள்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்படுவதே.
இத்தகைய சூழலில் மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் தெற்கு அலுவலகத்தில் மட்டுமே இரு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளனர்.
மற்ற மூன்றிலும் ஒருவரே உள்ளார். இவர்கள் சில நாட்களில் அலுவலக பணிக்கு உதாரணமாக கோர்ட்டிற்கு செல்ல நேர்ந்தால். அன்றைய நாளில் குறிப்பிட்ட அலுவலகத்தில் பணி நடக்காது.
காத்திருக்கும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தவிர்க்க முடியாது. குறிப்பாக வெளி மாவட்டம், மாநிலங்களிலிருந்து வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அதே நேரத்தில் புரோக்கர்களுக்கும், வாகன விற்பனையாளர்களுக்கும் இவ்விபரம் முன்னரே தெரிவிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் அன்றைய நாளில் அலுவலகத்திற்கு வருவதில்லை.
மக்களுக்கு ஏற்படும் இச்சிரமத்தை போக்க மேற்குறிப்பிட்ட மூன்று அலுவலகங்களிலும் கூடுதலாக தலா ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.