/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர்மட்ட பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
/
உயர்மட்ட பாலம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : அக் 22, 2025 10:59 PM
கிணத்துக்கடவு: கோதவாடி --- செட்டியக்காபாளையம் செல்லும் ரோட்டில், குளம் அருகே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, கோதவாடியில் இருந்து செட்டியக்காபாளையம் செல்லும் ரோட்டில் அதிகளவு விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்த ரோட்டின் குறுக்கே கோதவாடி குளத்தில் இருந்து வரும் நீர் வழிப்பாதை உள்ளது.
அதிகமாக மழை பெய்யும் நேரத்தில் இந்த ரோட்டில், மழைநீர் செல்லும். இதனால் இவ்வழியாக செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், விவசாயிகள் விளைபொருட்கள் ஏற்றிச் செல்வதிலும், பொதுமக்கள் பயணிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, இந்த ரோட்டில் உள்ள நீர்வழிப் பாதை அருகே, உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

