/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நால் ரோட்டில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
/
நால் ரோட்டில் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 11:54 PM
உடுமலை : குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், விபத்துகளை குறைக்க தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பொள்ளாச்சி - தாராபுரம் மற்றும் உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் நால்ரோடு குடிமங்கலத்தில் உள்ளது.
இப்பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை சந்திப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 'சென்டர் மீடியன்' மற்றும் வேகத்தடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நால்ரோடு பகுதியில், வாகனங்கள் தாறுமாறாக ஒன்றையொன்று முந்திச்செல்ல முயற்சிக்கின்றன. இதனால், போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு விபத்துகள் அதிகரிக்கின்றன.
இரு மாநில நெடுஞ்சாலைகளிலும் கனரக வாகனப்போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, குடிமங்கலம் நால்ரோடு பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

