தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டுமான பொருள் காலாவதி; இழப்பீடு வழங்க உத்தரவு 

கட்டுமான பொருள் காலாவதி; இழப்பீடு வழங்க உத்தரவு 

கட்டுமான பொருள் காலாவதி; இழப்பீடு வழங்க உத்தரவு 


ADDED : ஏப் 09, 2025 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை, சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், கட்டுமான உள் அலங்கார தொழில் செய்து வருகிறார். இவர், சிங்காநல்லூரில் கோபிகிருஷ்ணன் கட்டுமான பொருள் விற்பனை நிறுவனத்தில்,16,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினார்.

ஆனால், அந்த பொருட்கள் காலாவதியானது தெரியவந்தது. கடைக்கு சென்றுமுறையிட்டபோது, பணத்தை திருப்பி தருவதாககூறினர். பல மாதங்களாகியும் பணத்தை தராமல் ஏமாற்றினர். இதனால் இழப்பீடு வழங்கக் கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல்மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்தஉத்தரவில், 'எதிர்மனுதாரர் சேவை குறைபாடுசெய்துள்ளதால், 16,000 ரூபாய் திருப்பிகொடுப்பதோடு, மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய் வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us