/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைக்கு ஊட்டச்சத்து அளிக்க செயல் விளக்கம்
/
தென்னைக்கு ஊட்டச்சத்து அளிக்க செயல் விளக்கம்
ADDED : ஏப் 23, 2025 10:55 PM
அன்னுார்; தென்னையில் வேர் ஊட்டச்சத்து வழங்க செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இயங்கும், குமரகுரு வேளாண் கல்லூரியை சேர்ந்த, இறுதி ஆண்டு பட்டப் படிப்பு மாணவியர், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். கஞ்சப் பள்ளியில் ஒரு தோட்டத்தில் தென்னையில் வேருக்கு ஊட்டச்சத்து அளிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
வேளாண் மாணவியர் பேசுகையில், 'ஒரு தென்னை மரத்திற்கு, 200 மில்லி என ஆறு மாதத்திற்கு ஒருமுறை தர வேண்டும். மரத்திலிருந்து ஒன்றரை அடி தொலைவில், பென்சில் அளவு உள்ள ஒரு வேரை தேர்வு செய்து, ஒரு பாலித்தின் கவரில் 200 மில்லி ஊட்டச்சத்து மருந்து எடுத்து வேர் நனையும்படி செய்து கட்ட வேண்டும்.
இதனால் தென்னையில் காய்ப்பு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்,' என்றனர். இதில் சுற்று வட்டார விவசாயிகள் பங்கேற்றனர்.