தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குப்பை மறுசுழற்சி கண்காட்சியில் தரம் பிரிப்பது குறித்து விளக்கம்

குப்பை மறுசுழற்சி கண்காட்சியில் தரம் பிரிப்பது குறித்து விளக்கம்

குப்பை மறுசுழற்சி கண்காட்சியில் தரம் பிரிப்பது குறித்து விளக்கம்


ADDED : செப் 14, 2025 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கோவை மாநகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டத்தில், குப்பை மறுசுழற்சி பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சி, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் துவக்கி வைத்தார்.

குப்பையை தரம் பிரித்து வழங்குவது, எவ்வாறு கையாள்வது, மறுசுழற்சி செய்வது மற்றும் பாதுகாப்பாக அகற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமும் 100 கிலோவுக்கும் அதிகமாக குப்பை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் 5,000 சதுரடிக்கு மேல் பரப்பளவில் செயல்படும் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, குப்பை பிரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளர்களின் சேவையை பயன்படுத்தி, பிரிக்கப்பட்ட குப்பையை முறையாக வழங்க அறிவுறுத்தப்பட்டது. மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us