/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய விளை பொருட்களை ஏற்றுமதி செய்தால் வருமானம் 'டபுள்' ஆக உயரும்: கோவையில் மத்திய இணை அமைச்சர் பேச்சு

ADDED : ஜூலை 12, 2025 01:41 AM

கோவை; விவசாய விளைபொருட்களை, விவசாயிகள் ஏற்றுமதி செய்தால் அவர்களது வருமானம் இரட்டிப்பாகும், என, கோவையில் மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே பேசினார்.
கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், 'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை பார்வையிட்ட பின் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே பேசியதாவது:
சர்வதேச அளவில் பதப்படுத்தப்பட்ட, உணவுப் பொருட்களுக்கு தேவை அதிகம் உள்ளது. குறிப்பாக, உண்ண தயார் நிலையில் உள்ள உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உடனடி சமையலுக்கு பயன்படும் பொருட்களுக்கும், தேவை அதிகம் உள்ளது.
சிறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும் உணவு பதப்படுத்தும் தொழிலில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்களது பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தால் வருமானம் இரட்டிப்பாகும். தொழில் முனைவோர் அதிக லாபம் பெறலாம்.
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள், சர்வதேச அளவில் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி தொழில்துறை இயந்திரங்கள் உற்பத்தியில், முன்னணி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் ஏற்றுமதியில் தங்களது பங்களிப்பை உயர்த்த வேண்டும்.
இது போல், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இணைந்து பாடுபட்டால், உலக அளவில் இந்தியா உயரும். 2047-ல் தன்னிறைவு பெற்ற நாடாக வேண்டும் என்ற கனவு நிறைவேறும்.
புதிய தலைமுறையினர் அடுத்த தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர். பழைய மாடல்கள் மறைந்து, புதிய வணிக யுத்திகள் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ், பல்வேறு தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.