/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை ஏற்றுமதி: 7 மாதங்களுக்கு கெடாது புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்குது வேளாண் பல்கலை
/
கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை ஏற்றுமதி: 7 மாதங்களுக்கு கெடாது புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்குது வேளாண் பல்கலை
கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை ஏற்றுமதி: 7 மாதங்களுக்கு கெடாது புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்குது வேளாண் பல்கலை
கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை ஏற்றுமதி: 7 மாதங்களுக்கு கெடாது புதிய தொழில்நுட்பத்தோடு அழைக்குது வேளாண் பல்கலை
ADDED : ஜூலை 31, 2025 10:04 PM

கோவை; உணவு ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்பும் வேளாண் தொழில் முனைவோருக்கும் உதவும் வகையில், 'ரிடார்ட் பவுச் பேக்கேஜிங்' இயந்திரத்தை நிறுவியுள்ளது கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகம். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில்முனைவோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழில்நுட்ப காப்பக தலைமைச் செயலர் ஞானசம்பந்தம் 'தினமலர்' நாளிதழிடம் பகிர்ந்து கொண்டதாவது:
மத்திய அரசின், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ், நிதி பிரயாஸ் திட்டம், கோவை வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் செயல்படுத்தப்படுகிறது. நாட்டில் வேறெந்த வேளாண் பல்கலையிலும் இந்த திட்டம் இல்லை. முதன்முறையாக இங்கு செயல்படுத்துகிறோம். வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க, ரூ. 1 கோடி மதிப்பில், 'நிதி பிரயாஸ் சாலா ஆய்வகம்' மூன்று பிரிவுகளாக நிறுவப்பட்டுள்ளது. முதலாவது, எலெக்ட்ரானிக் பிரிவு. இங்கு, எலெக்ட்ரானிக் இயந்திரங்களை புதிதாக உருவாக்குவதற்கான ஐடியா உங்களிடம் இருந்தால், அதனை 'புரோட்டோ டைப்' ஆக உருவாக்க, இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐ.ஐ.டி., போன்ற ஆய்வகங்களில் மட்டுமே உள்ள 3டி பிரிண்டர், பயோ பிரிண்டர், பி.சி.பி., மில்லிங் உள்ளிட்ட 24 வகையான இயந்திரங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
அதேபோன்று, லேத் மெஷின்களை உருவாக்குவதற்கான ஆய்வகமும், இயந்திரங்களும் உள்ளன.
முத்தாய்ப்பாக, 'ரிடார்ட் பவுச் பேக்கேஜிங்' இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 40 லட்சம். வேளாண் தொழில் முனைவைப் பொறுத்தவரை, உணவு பதனிடல் துறையில்தான் அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. வெளிநாடுகளுக்கு உணவை ஏற்றுமதி செய்யும்போது, அவை நீண்டகாலத்துக்கு கெடாமல் இருக்க வேண்டும். இந்த இயந்திரத்தில், கீரைக்கூட்டு முதல் பிரியாணி வரை எந்த உணவையும் பதனம் செய்யலாம்.
அதிநவீன தொழில்நுட்பத்தில் பேக்கிங்கை சூடுபடுத்தி, உடனடியாக குளிரச் செய்து, அந்த உணவுப் பொருளை 3 முதல் 7 மாதங்கள் வரை கெடாமல் பாதுகாக்கிறது. மசாலா முதல் சமைத்த உணவு வரை எதை வேண்டுமானாலும் பதனிடலாம். நீண்ட நாட்களுக்கு அதன் அசல் தன்மையோடு, கெட்டுப்போகாமல் வைத்திருக்கும்.
இப்படி பதனம் செய்த உணவுப் பொட்டலத்தை அறை வெப்பநிலையிலேயே வைத்திருக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.