/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி இலங்கை, மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி குறைவு
/
ஊட்டி உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி இலங்கை, மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி குறைவு
ஊட்டி உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி இலங்கை, மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி குறைவு
ஊட்டி உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி இலங்கை, மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி குறைவு
ADDED : ஜன 26, 2024 11:09 PM
மேட்டுப்பாளையம்: இலங்கை, மாலத் தீவுகளில் ஆர்டர் குறைவால், உருளைகிழங்கு ஏற்றுமதி குறைந்தது. இதனால் ஊட்டி கிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. தினமும் மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளில் 50 சதவீதம் வரை கேரள மாநிலத்திற்கும், மீதம் உள்ள 50 சதவீதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலுார், ஈரோடு மாவட்டம் திம்பம், தாளவாடி, கேர்மாளம், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர், குஜராத் மாநிலத்திலிருந்து கோலார், மகாராஷ்டிராவில் இருந்து இந்துார், உத்திரபிரதேசத்தில் இருந்து ஆக்ரா உள்ளிட்ட நகரங்களிலிருந்து தினமும் 1,800 முதல் முதல் 2000 டன் வரை உருளைக்கிழங்கு மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதில் ஊட்டி உருளைக்கிழங்கிற்கு என தனி ருசி உள்ளதால், மற்ற மாநிலங்களின் கிழங்கை விட ஊட்டி உருளை கிழங்குக்கு எப்போதும் மவுஸ் அதிகம். குறிப்பாக மேட்டுப்பாளையம் மண்டியில் இருந்து ஊட்டி உருளைக்கிழங்கு இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு தினமும் 500 டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் ஆர்டர் பாதியாக குறைந்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து உருளைகிழங்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. இதனால், ஊட்டி உருளைகிழங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது:
தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்தும், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், குஜராத்தில் இருந்தும் அதிக அளவில் உருளைக்கிழங்குகள் வருகின்றன.
இதில் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இந்தூர் கிழங்கு ரூ.800 முதல் 900 வரையும், குஜராத் கிழங்கு ரூ.700 முதல் ரூ.750 வரையும், ஊட்டி கிழங்கு ரூ.700 முதல் ரூ.1,300 வரையும் விற்பனை ஆகிறது.
ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் இருந்திருந்தால், ஊட்டி கிழங்கு ரூ.1,300 முதல் ரூ.1,700 வரை விற்பனை ஆகியிருக்கும்.
தற்போது ஆர்டர் குறைவால் மூட்டைக்கு ரூ.500 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

