/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவை 'எக்ஸ்பிரஸ்' வேகம்! தொழில்துறையினர் வேண்டுகோள்
/
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவை 'எக்ஸ்பிரஸ்' வேகம்! தொழில்துறையினர் வேண்டுகோள்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவை 'எக்ஸ்பிரஸ்' வேகம்! தொழில்துறையினர் வேண்டுகோள்
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவை 'எக்ஸ்பிரஸ்' வேகம்! தொழில்துறையினர் வேண்டுகோள்
ADDED : அக் 02, 2025 01:03 AM

கோவை: கோவை மெட்ரோவுக்கு மத்திய அரசு, விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசும் தேவையான முன்னெடுப்புகளை, துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும் என, தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை - அவிநாசி சாலையில், 20.4 கி.மீ., நீளத்துக்கும், சத்தி சாலையில் 14.4 கி.மீ., நீளத்துக்கு என இரு வழித்தடங்களில், ரூ.10 ஆயிரத்து 740 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, 2024 பிப்.,19ல் அனுப்பப்பட்டது. இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக, தயானந்த் கிருஷ்ணன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம், 'இத்திட்டங்கள் அதிக செலவு கொண்டவை. பல்வேறு படிநிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்த வேண்டியுள்ளது. கோவை மெட்ரோ திட்டங்கள், முதற்கட்ட பரிசீலனையில் உள்ளன' என தெரிவித்துள்ளது.
கோவை தொழில் துறையினர் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கையை, தமிழக அரசு 19 மாதத்துக்கு முன்பே அனுப்பி விட்டது. சி.எம்.ஆர்.எல். நிறுவனமும், விரிவான போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கையை (சி.பி.ஏ.ஏ.ஆர்.), 2024 டிச.,ல் சமர்ப்பித்து விட்டது. இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
அதே சமயம், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் ஆக்ரா மெட்ரோ திட்டங்கள் 5 மாதங்களிலும், குஜராத்தின் ஆமதாபாத் முதல் கட்டம் 7.5 மாதங்களிலும், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் 6 மாதங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகத்தின் பெங்களூரு 2ஏ, 2பி திட்டங்களுக்கு அதிகபட்சம் 28.5 மாதங்கள் ஆகியுள்ளன. கோவை மெட்ரோவுக்கு மத்திய அரசு, விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும். மாநில அரசும் தேவையான முன்னெடுப்புகளை, துரிதகதியில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் ஆக்ரா மெட்ரோ திட்டங்கள் 5 மாதங்களிலும், குஜராத்தின் ஆமதாபாத் முதல் கட்டம் 7.5 மாதங்களிலும், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் 6 மாதங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தின் பெங்களூரு 2ஏ, 2பி திட்டங்களுக்கு அதிகபட்சம் 28.5 மாதங்கள் ஆகியுள்ளன.