/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையை துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க 'ஆடியோ' விழிப்புணர்வு
/
குப்பையை துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க 'ஆடியோ' விழிப்புணர்வு
குப்பையை துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க 'ஆடியோ' விழிப்புணர்வு
குப்பையை துாய்மை பணியாளரிடம் ஒப்படைக்க 'ஆடியோ' விழிப்புணர்வு
ADDED : அக் 02, 2025 12:55 AM
கோவை; ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை சமயத்தில் உருவாகும் குப்பையை, பொது இடங்களில் கொட்டுவதை தவிர்த்து, துாய்மை பணியாளரிடம் நேரில் ஒப்படைக்க, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வீடுகளை சுத்தம் செய்து வாழை, மா இலை, கரும்பு மற்றும் பூஜை பொருட்களை படைத்து, கொண்டாடி வருகின்றனர்.
தினமும், 1,200 டன் வரையிலான குப்பை, மாநகராட்சி பகுதிகளில் சேகரமாவது வழக்கம். பண்டிகை காலங்களில் இதை விட கூடுதலாக குப்பை உருவாகும். இது, துாய்மை பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமை. பண்டிகை முடிந்ததும் வாழை உள்ளிட்டவற்றை, பொது இடங்களில் வீசிச் செல்வது ஆண்டுதோறும் தொடர்கதையாக உள்ளது.
இ தனால், குப்பையை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்த்து மாநகராட்சி துாய்மை பணியாளர்களிடம் நேரில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி கிழக்கு மண்டலம், 54வது வார்டு காமராஜர் ரோடு, ராமானுஜம் நகர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், துாய்மை பணியாளர்கள், பதிவு செய்யப்பட்ட 'ஆடியோ'வை ஒலிபரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:
பண்டிகை சமயங்களில் வழக்கத்தைவிட, 50 முதல், 100 டன் வரையிலான குப்பை தினமும் கூடுதலாக சேகரமாகிறது. சிலர் பொது இடங்களில் இவற்றை வீசிச் செல்வது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கிறது. அவ்வாறு வீசுவோரை கேமரா மூலம் கண்காணித்து, அபராதம் விதிக்கப்படுகிறது.
'துாய்மை பணியாளர்களிடம் குப்பை கழிவுகளை நேரில் ஒப்படைக்க வேண்டும்; பொது இடங்களில் வீசக்கூடாது' என, ஆடியோ ஒலி பரப்பி வருகிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.