ADDED : அக் 02, 2025 12:54 AM

கோவை; ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி முதியோர் காப்பகத்தில், உலக முதியோர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நல உரிமைச் சங்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு பெட்ஷீட், ஆடைகள் வழங்கப்பட்டன. காப்பகத்துக்கு மிக்ஸி, கிரைண்டர் போன்ற சமையல் உபகரணங்கள் அளிக்கப்பட்டன.
தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நல உரிமைச் சங்க மாநில தலைவர் ராகவன் பேசுகையில், ''முதுமையை எல்லோரும் கடந்துதான் செல்ல வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இன்றைய தலைமுறையினர், மரியாதை அளித்து வணங்க வேண்டும்.
எதிர்கால சந்ததியினரை நல்ல முறையில் வழிநடத்தும் பக்குவம், முதியோர்களுக்கு மட்டுமே உள்ளது; முதியோரை கொண்டாட வேண்டும்,'' என்றார்.
மாநகராட்சி மேற்கு மண்டல உதவி கமிஷனர் துரை முருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசகர் மதிவாணன், ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.