/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் முர்தேஸ்வர் வரை நீட்டிப்பு
/
கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் முர்தேஸ்வர் வரை நீட்டிப்பு
கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் முர்தேஸ்வர் வரை நீட்டிப்பு
கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் முர்தேஸ்வர் வரை நீட்டிப்பு
ADDED : அக் 16, 2024 06:43 AM

கோவை : ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக, வாரமிருமுறை இயக்கப்படும் கச்சிகுடா-மங்களூர் ரயில், கர்நாடகாவின் முர்தேஸ்வர் வரை நீட்டிக்கப்பட்டு, அங்கிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி எண் 12789, கச்சிகுடாவில், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை 6:05 மணிக்குப் புறப்பட்டு, முர்தேஸ்வரை அடுத்த நாள் பகல் 2:05 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பூரை நள்ளிரவு 12:03 மணிக்கும், கோவையை நள்ளிரவு 1:12 மணிக்கும் வந்தடையும்.
வண்டி எண்: 12790, முர்தேஸ்வரில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில், மாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு, கச்சிகுடாவை அடுத்த நாள் இரவு 11:40 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கோவையை அதிகாலை 3:52 மணிக்கும், திருப்பூரை அதிகாலை 4:43 மணிக்கும் வந்தடையும்.
இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.