sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு அங்கன்வாடி செயல்பாடு பாதிப்பு

/

 ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு அங்கன்வாடி செயல்பாடு பாதிப்பு

 ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு அங்கன்வாடி செயல்பாடு பாதிப்பு

 ஊழியர்கள் போராட்டம் நீடிப்பு அங்கன்வாடி செயல்பாடு பாதிப்பு


ADDED : பிப் 12, 2026 05:12 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக, கோவையில் அங்கன்வாடி மையங்களின் கற்றல் பணிகள் மற்றும் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள திட்டம் 1, 2, 3, 4 மற்றும் பேரூர், சூலூர், சுல்தான்பேட்டை, அன்னூர், கிணத்துக்கடவு, வால்பாறை உள்ளிட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000- பேருக்கு மேல் போராடுகின்றனர்.

இதனால் பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் செயல்படவில்லை. மொத்தம் உள்ள 1,640 மையங்களில், 565 மையங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

மூன்று அல்லது நான்கு மையங்களை ஒருங்கிணைத்து இயக்கி வருகிறோம். சில இடங்களில் கண்காணிப்பாளர்கள் மூலம் பணிகள் கவனிக்கப்படுகின்றன. முழு நேரமாக கவனிப்பதில் சிரமம் இருப்பதால், மதிய உணவிற்கு பிறகு குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு பெற்றோருக்கு சொல்லியுள்ளோம், என்றனர்.






      Dinamalar
      Follow us