ADDED : பிப் 12, 2026 05:12 AM

கோவை: வேளாண் பல்கலை வளாகத்தில், சிறுதானிய திருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. துணைவேந்தர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
சிறுதானியங்களின் தேவை, அவற்றின் நன்மைகள், சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு செய்து வரும் முயற்சிகள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து வேளாண் இணை இயக்குநர் தமிழ்செல்வி விளக்கினார்.
சிறுதானியங்கள் துறை, பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் சாகுபடி முறைகள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினர். சிறுதானிய சாகுபடி குறித்த கையேடு வெளியிடப்பட்டது. விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தினை தயிர் சாதம், சோளத்தில் இருந்து கேசரி, இனிப்பு அவல், வாழைப்பழ ஸ்மூத்தி, கேழ்வரகில் இருந்து சாக்கோ ஸ்மூத்தி, இனிப்பு கொழுக்கட்டை, சுருள், புட்டு, சாமையில் இருந்து தேங்காய் சாதம், பொங்கல், கம்பு பனியாரம், கூழ், அல்வா, சேவை, நூடுல்ஸ், கேழ்வரகு உருண்டை, வடை, கட்லெட், இடியாப்பம் என பல்வேறு உணவுகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
