sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலை 'அட்மிஷன்' விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

/

வேளாண் பல்கலை 'அட்மிஷன்' விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை 'அட்மிஷன்' விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை 'அட்மிஷன்' விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு


ADDED : ஜூன் 07, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளம் அறிவியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி, வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் 14 இளம் அறிவியல் பாடப்பிரிவு மற்றும் 3 பட்டயப் படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலையில் 3 இளம் அறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

வேளாண் பல்கலைக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 6,921 இடங்களும், அண்ணாமலை பல்கலையில், 340 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

http://tnau.ucanapply.com என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்க, வரும் 8ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 16ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனவே, மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 16ம் தேதிக்கு முன், சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு, வேளாண் பல்கலையை 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், அண்ணாமலை பல்கலையை, 98657 03537, 94420 29913 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us