/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாக நடித்து பணம் பறிப்பு; மூன்று பேர் கைது
/
போலீசாக நடித்து பணம் பறிப்பு; மூன்று பேர் கைது
ADDED : அக் 13, 2024 10:34 PM
கோவை : போலீஸ் போல் நடித்து முதியவரிடம் பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சத்தியமோகன், 63; வரி ஆலோசகர்.
இவர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது, அங்கு வந்த மூன்று பேர், தாங்கள் போலீசார் என்று கூறியுள்ளனர்.
பின்னர், சத்தியமோகனை காந்திபுரம், பாரதியார் சாலைக்கு அழைத்துச் சென்ற அவர்கள், 'ஏன் அங்கு நீண்ட நேரம் நின்றிருந்தீர்கள்' என மிரட்டி, அவரிடம் இருந்து 2,500 ரூபாயைப் பறித்து, தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக, சத்தியமோகன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
பஸ்ஸ்டாண்ட் சி.சி.டி.வி., கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், போலீஸ் போல் நடித்து பணம் பறித்த, புதுக்கோட்டை, திருமயத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலாளி கலியமூர்த்தி, 48; திண்டுக்கல்லைச் சேர்ந்த டிரைவர் ரவிசங்கர், 48; கோவை, பெ.நா.பாளையத்தைச் சேர்ந்த ஷேர் மார்க்கெட் புரோக்கர் மோகன்ராஜ், 50 ஆகியோரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.