/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் என கூறி ரொக்கம் பறிப்பு; ஐந்து பேர் கைது
/
போலீஸ் என கூறி ரொக்கம் பறிப்பு; ஐந்து பேர் கைது
ADDED : பிப் 18, 2024 02:24 AM
போத்தனூர்:போலீஸ் என கூறி, பெட்டிக்கடைக்காரரிடம் ரொக்கம் பறித்த ஐந்து பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை அருகே, புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், 34 பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, ஐந்து பேர் கடைக்கு வந்தனர். தாங்கள் போலீசார் எனவும், புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் வந்ததாக கூறி, முருகேசன் மற்றும் உடனிருந்த, அவருடைய இரு நண்பர்களையும் மிரட்டினர். '
தொடர்ந்து மூவரையும் ஒரு காரில் ஏற்றி, வழக்கு போட்டு விடுவோம் என மிரட்டினர். கடையினுள் உள்ள தொகையை தருமாறு கேட்டு, கத்தியை காட்டி மிரட்டினர். முருகேசன் கடையிலிருந்த, ரூ.2,850 ஐ கொடுத்தார். மூவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.
முருகேசன் புகாரின்பேரில், குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினார். இதில் பாலக்காடு, புது நகரை சேர்ந்த டிரைவர் ஜாஹிர் ஹூசேன், 49, திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் சுமன், 42, பாலக்காடு, சித்தூரை சேர்ந்த டெய்லர் ஜோசப், 55, நல்லேபுள்ளியை சேர்ந்த மோனிஷ், 22 மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆரோக்கியதாஸ், 53 ஆகியோர் சிக்கினர். ஐந்து பேரிடமும் விசாரணை நடக்கிறது.