/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
/
போக்குவரத்து ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
ADDED : நவ 06, 2024 11:40 PM
கோவை ; அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு சங்கரா கண் மருத்துவமனை கண் சிகிச்சை முகாமை நடத்தியது.
தமிழகம் முழுக்க உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாமை நடத்த சங்கரா கண் மருத்துவமனை தமிழக அரசிடம் அனுமதி பெற்றது.
இதையடுத்து கோவையிலுள்ள உக்கடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முகாமை நடத்தியது.
இதில் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள், பணிமனை பணியாளர்கள், அதிகாரிகள் என்று அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கண்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சங்கரா கண் மருத்துவமனை குழுவினர், மருத்துவ உபகரணங்களுடன் சென்று கண்ணில் ஏற்படும் பார்வை குறைபாடு, சர்க்கரை நோயால் ஏற்படும் கிளைக்கோமா, கண்களில் ஏற்படும் ரத்த அழுத்த வேறுபாடு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதா என்று பணியாளர்களுக்கு சோதனை மேற்கொண்டனர்.
இதில் பலருக்கும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளதோடு, கண்ணாடி அணிந்து கொள்ளவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாம் கோவையிலுள்ள அரசு போக்குவரத்து கிளைகளில் தொடர்ந்து நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சங்கராகண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் செய்திருந்தார்.