/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் சிகிச்சை முகாம்; 70 பேர் பங்கேற்பு
/
கண் சிகிச்சை முகாம்; 70 பேர் பங்கேற்பு
ADDED : நவ 18, 2024 10:23 PM

வால்பாறை ; வால்பாறை அருகே நடந்த இலவச கண்சிகிச்சை முகாமில், 70 பேர் கலந்து கொண்டனர்.
தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆனந்தம் அறக்கட்டளை டிரஸ்ட் மற்றும் பொள்ளாச்சி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை இணைந்து, வால்பாறையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.
வால்பாறை அடுத்துள்ள சேடல்டேம் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்த இம்முகாமில், கண்புரை, மாறுகண், நீரழுத்த நோய், மாலைக்கண்நோய், துாரப்பார்வை, கிட்டபார்வை உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட அனைத்து பாதிப்புக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டன. முகாமில் மொத்தம், 70 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில், 10 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, மணிகண்டன், ராஜ்குமார், பாலாஜி, தமிழ்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.