ADDED : பிப் 09, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி மன்றம், சிறுமுகை லயன்ஸ் கிளப் சார்பில், அக்கரை செங்கப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், இன்று காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, கண் சிகிச்சை இலவச முகாம் நடக்கிறது.
முகாமில், அனைத்து கண் பிரச்னைகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படும். 'அறுவை சிகிச்சையும், மேட்டுப்பாளையம், இம்மானுவேல் கண் மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படும். லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும்' என, ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.