/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்களின் சுமை குறைப்பதாக கண் துடைப்பு அறிவிப்பு! 'எமிஸ்' பணிகளிலிருந்து முழுமையாக விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜன 23, 2025 12:14 AM

கோவை:இனி, 'எமிஸ்' இணையத்தில் அத்தியாவசிய விபரங்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என, அரசு நேற்று அறிவித்துள்ள நிலையில், இது வெறும் கண்துடைப்பு அறிவிப்பு என விமர்சித்துள்ள ஆசிரியர் சங்கங்கள், இப்பணியில் இருந்து தங்களை முழுமையாக விடுவிக்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி சுய விபரங்கள் தொடர்பான தகவல்களை பராமரிக்க, https://emis.tnschools.gov.in என்ற தனி இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் பல்வேறு விபரங்களை, ஆசிரியர்கள் இதில் பதிவேற்ற வேண்டும்.
கற்பித்தலுக்கு மத்தியில் இது, கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்துவதாக, ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். பலமுறை இது குறித்து அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்தும், சொல்லிக்கொள்ளும் படி நடவடிக்கை இல்லை.
இதற்கென தனி ஆட்களை நியமிப்பதாக அறிவித்த அரசு, மாநிலம் முழுவதும், அரசு பள்ளிகளில் மட்டும் ஆய்வக உதவியாளர் உள்ளிட்டோரை, பணியமர்த்தி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இந்த சலுகை இல்லை.
இந்நிலையில், தற்போது, எமிஸ் இணையதளத்தில் பள்ளி அளவில் தரவுகளை உள்ளீடு செய்வதை குறைத்து, அத்தியாவசிய விபரங்கள் மட்டும், உள்ளீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரு பணிகள் மட்டுமே!
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறுகையில், ''எமிஸ் இணையதளத்தில் மதிப்பெண்கள், வருகை பதிவு மட்டுமே ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். மற்ற பணிகளை, எமிஸ் பணியாளர்கள்தான் மேற்கொள்ள வேண்டும். ஆய்வக உதவியாளர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை கொண்டு இப்பணி செய்யப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் இவர்களை பணியமர்த்த வேண்டும்,'' என்றார்.
கண்துடைப்பு அறிவிப்பு
இந்நிலையில், 'போராட்டம் நடத்துவதாக சங்கங்கள் ஒன்றுகூடி அறிவிக்கும் சமயத்தில் மட்டும், பாதிப்புகளை சமாளிக்க அரசு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஆனால், நடைமுறைப்படுத்துவதில்லை' என, ஆசிரியர்கள் சிலர் கொந்தளிக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
பணிச்சுமையை குறைப்பதாக, ஏற்கனவே இது போல் பல அறிவிப்புகள் வந்துவிட்டன; ஆனால், நடைமுறைப்படுத்தவில்லை. 100 வகையான போட்டிகள், விபரங்கள் பதிவு செய்ய வேண்டியுள்ளது. தனி ஆட்களை நியமித்தாலும், அவர்களுக்கும் மாணவர்கள் குறித்த தகவல்களை நாங்கள்தான் தரவேண்டியுள்ளது.
தனியாக நியமிக்கப்பட்டவர்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் மட்டும்தான் செய்கின்றனர். தேர்தல் சமயத்தில், வாக்குச்சாவடி பணி உள்ளிட்ட பணிகளிலும், எங்களை ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க மட்டுமே. அந்த வேலை, இந்த வேலை என இடையூறு செய்தால், கற்பித்தல் பணியை நுாறு சதவீதம் மேற்கொள்ள முடியாது.
மாணவ, மாணவியர்தான் பாதிக்கப்படுவர். ஆகவே, சுதந்திரமாக பாடம் நடத்தும் வகையில், கூடுதல் பணிகளில் இருந்து, அரசு எங்களை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.