/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈழுவா - தீயா ஜாதியை ஓ.பி.சி.,யில் சேர்க்கணும்
/
ஈழுவா - தீயா ஜாதியை ஓ.பி.சி.,யில் சேர்க்கணும்
ADDED : செப் 11, 2025 09:32 PM
பொள்ளாச்சி; ஈழுவா- தீயா தமிழக பேரமைப்பு மாநில தலைவர் செந்தாமரை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஈழுவா தீயா மக்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளனர். இவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், மத்திய அரசின் ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இதற்கு, மாநில அரசு பரிந்துரைத்தால் மட்டுமே மத்திய அரசின் ஓ.பி.சி., பட்டியலில் இடம்பெற முடியும். அவ்வகையில், பொள்ளாச்சியில், 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் ' என்ற பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், இது குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில், அ.தி.மு.க., 2026ல் ஆட்சிக்கு வந்தவுடன், ஈழுவா- தீயா மக்களின் கோரிக்கை ஏற்று, அவர்களுக்கு ஓ.பி.சி., ஜாதிச் சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்யப்படும் என, தெரிவித்தார். இந்த செய்தி, தமிழக வாழ் ஈழுவா தீயா மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.