தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முக்காபலா வக்காபலா ...

முக்காபலா வக்காபலா ...

முக்காபலா வக்காபலா ...


UPDATED : ஆக 06, 2026 04:00 PM

ADDED : ஆக 06, 2026 02:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 04:00 PM ADDED : ஆக 06, 2026 02:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:வாழ்க்கை ஒரு விளையாட்டு… சரியான மூவ் போட்டா தான் வின்!” அப்டீங்ற சினிமா வசனம் போல, நம்ம கோவையிலும் ஒரு புதிய கேம் கல்ச்சர் உருவாகிட்டு வருது.

டாடாபாத் நூறடி சாலை பக்கமா 6-வது தெருவில் இருக்கு வக்காபோ ஒர்க் கபே. வேலை செய்ங்க, விளையாடுங்க, சாப்பிடுங்க, எஞ்சாய் பண்ணுங்க. இதான் அவங்க ஸ்லோகன். இளைஞர்கள், இளைஞிகள் தனியாவும் கும்பல் கும்பலாவும் வந்துட்டே இருக்காங்க. குடும்பத்தோட குழந்தைகளோட வரவங்களையும் பாக்கலாம்.

வீட்ல நாம எல்லாரும் பொழுதுபோக்கா விளையாடின போர்டு கேம்ஸ் எல்லாத்தையும் (ஆக்சுவலா எல்லாத்தையும் இல்ல, பாப்புலரா இருக்றத) இங்க போட்டியா நடத்றாங்க. போர்டு கேம் டோனமென்ட்.

250- கேம்சுக்கு மேல இருக்கு. ப்ளட் ஆன் தி க்ளாக்டவர், அன்மேச்டு மாதிரியான சில கேம்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு. போட்டி நடக்கும்போது பார்வையாளரா வந்து கைதட்டி விசிலடிச்சு என்கரேஜ் பண்றாங்க. போட்டில கலந்துக்க பேர் பதிவு பண்ணிட்டு, தினமும் காலை அல்லது மாலை இங்க வந்து பலரும் ட்ரெய்ன் பண்றத பாக்க செமயா இருக்கு.

போட்டில கலந்துக்காம சும்மா டைம்பாஸ் எக்ஸ்பீரியன்சுக்காக வரவங்களும் ஜாஸ்தி. கேம்ஸ் ஆட முதல் ஒரு மணி நேரத்துக்கு 150 ரூபா. அப்றம் 100. சுவையான ஸ்னாக்ஸ், அட்டகாசமான காபி கிடைக்குது.

நேஷனல் லெவல் டென்னிஸ் ப்ளேயர் கார்த்திக் குமரன் தான் வகாபோ கபே நிறுவனர். வகாபோன்னா என்ன அர்த்தம், அத சொல்லுங்க, முதல்ல! என்றால் சிரிக்கிறார். “கபே நீங்க எல்லா இடத்லயும் பாக்கலாம். இது ஒர்க், காபி, போர்டு கேம்ஸ் சேந்த கபே, அதான் Wacobo என்கிறார்.

காலை 11.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் கபே இது. உள்ளே நுழைந்ததுமே இது வேற லெவல் என்பது புரியும். வேலை இடம், விளையாடும் இடம், உரையாடும் இடம் அப்டீனு தனி தனியா பிரிச்சு வச்சிருக்காங்க. என்ன வேலை, யார் செய்றாங்க?னு கேட்டா, லேப்டாப்ப தூக்கிட்டு தொந்தரவு இல்லாம வேலை செய்ய நினைக்கிறவங்க அமைதியா அத பண்ணட்டும்னு விட்ருவாங்களாம்.

ஆனா, பக்கத்லயே ஜாலியா போர்டு கேம்ஸ் ஆட்றதையும், ருசியான ஸ்னாக்ஸ் முழுங்கிட்டு இருக்றதையும் பாத்தா யாருக்கு வேலை செய்ய மூடு வரும்?

“அய்யோ, நீங்க நம்ப மாட்டீங்க. இது எதையுமே கவனிக்காம, ஒரே ஒரு காபிய உறிஞ்சிகிட்டு கண்ணும் கருத்துமா வேலைய முடிச்சிட்டு போற கஸ்டமர்சும் இருக்காங்க..” என்று கண்ணடிக்கிறார். பின்னால் முக்காபலா பாடல் ஒலிக்கிறது. பைதிவே, முக்காபலா அப்டீன்னா போட்டினு அர்த்தம். தெரியும்ல்ல?

இசை மழை பெய்ய ஓப்பன் மைக், சிரிச்சு உருள ஸ்டாண்ட் அப் காமெடி, செயல் திறன் மேம்பட வொர்க்ஷாப் நிகழ்ச்சிகளும் நடத்றாங்க. திரும்பி போகும்போது எல்லார் முகத்லயும் மகிழ்ச்சியும் திருப்தியும் பளீர்னு தெரியுது.

மொபைல்போனை கட்டிகிட்டு அழுறதுக்கு பதிலா எந்த டைவர்ஷன் கிடைச்சாலும் ஓகே. வகாபோ மாதிரி டைவர்ஷன்னா டபுள் ஓகே.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us