தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கும்பாபி ேஷகம் - மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள்

கும்பாபி ேஷகம் - மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள்

கும்பாபி ேஷகம் - மாசாணியம்மன் கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள்


ADDED : டிச 11, 2024 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து நீண்ட துாரம் பயணம் செய்யும் பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் வாயிலாக, வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், பாலுாட்ட அறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்த குண்டம் நடைபெறும் இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ராஜகோபுரத்தின் கிழக்குப்பகுதியில் ஒன்றும், அன்னதானக்கூடத்தில் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர, கோவிலுக்கு கிழபுறம் நவீன வசதிகளுடன் கூடிய (ஆண்கள் மற்றும் பெண்கள்) கழிவறைகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று குளியல் அறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கை செலுத்துவதற்கான திருக்கோவிலுக்கு தெற்குப்புறம் முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து படிக்கும் வகையில், நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us