/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில ஒப்புமை தொடர்பு பட்டியல் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி
/
நில ஒப்புமை தொடர்பு பட்டியல் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி
நில ஒப்புமை தொடர்பு பட்டியல் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி
நில ஒப்புமை தொடர்பு பட்டியல் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி
ADDED : நவ 27, 2024 10:09 PM
கோவை; கோவையை சேர்ந்த மனை மற்றும் நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் ஒப்புமை தொடர்பு பட்டியலை சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் ஒப்புமை தொடர்பு பட்டியலை சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://coimbatore.nic.in/survey/ என்ற இணையவழி முகவரியில் கீழ்கண்டவாறு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://coimbatore.nic.in/survey/ என்ற இணையவழி முகவரிக்கு சென்று, மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல் என்ற ஆப்சனை -ஐ தேர்வு செய்யவும். கோவை மாவட்ட நகர மறு நில அளவை ஒப்புமை தொடர்பு பட்டியல் தேர்ந்தெடுத்தவுடன் கீழ்கண்ட பக்கம் கணினி திரையில் தெரியும்.
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பழைய புல எண்ணிற்கான தற்போதைய நகரளவை புல எண் விபரங்கள் (ஒப்புமை தொடர்பு பட்டியலை) மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் மேற்கண்ட இணையவழி முகவரிக்கும் சென்று ஒப்புமை தொடர்பு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோவை மாவட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.