/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தமிழ் நிலம்' மொபைல் செயலியில் நில அளவை தகவல்கள் அறிய வசதி
/
'தமிழ் நிலம்' மொபைல் செயலியில் நில அளவை தகவல்கள் அறிய வசதி
'தமிழ் நிலம்' மொபைல் செயலியில் நில அளவை தகவல்கள் அறிய வசதி
'தமிழ் நிலம்' மொபைல் செயலியில் நில அளவை தகவல்கள் அறிய வசதி
ADDED : ஜன 31, 2024 01:13 AM
கோவை;தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை, NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்துடன் 'தமிழ் நிலம்' என்கிற மொபைல் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான, இணைய வழி சேவை தமிழ் நிலம் Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் - ஊரகம் மற்றும் தமிழ்நிலம் - நகரம் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க 'அ' பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை எங்கிருந்தாலும் அறியும் வகையில், www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய, வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் சுற்றறிக்கைகள், அரசாணைகள் மற்றும் பரப்பளவு போன்றவற்றை அறியலாம்.
பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம், என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்திருக்கிறார்.