/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்த அறிவுரை
/
தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்த அறிவுரை
தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்த அறிவுரை
தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க இணையத்தை பயன்படுத்த அறிவுரை
ADDED : ஆக 14, 2025 10:51 PM
கோவை: தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளுக்கு இணையதளத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர்கள் சரவணன், வினோத்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் சட்டத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் தொழிற்சாலைகள் புதிதாக மேம்படுத்தப்பட்ட, https://dish.tn.gov.in என்ற இணையதளத்தில் தொழிற்சாலை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தொழிற்சாலை உரிமம் விண் ணப்பம், உரிமம் புதுப்பித்தல், வரைபடம் ஒப்புதல், ஆண்டு அறிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர் பதிவு சான்று மற்றும் உரிமம் புதுப்பித்தல், வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு சான்று உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இத்துறையின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அனைத்து கட்டணங்களும் இ-சலான் மூலம் இணையதளம் மூலமாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலை பெயர் மாற்றம், உரிமையாளர் மாற்றம், ஒப்பந்த தொழிலாளர் பதிவு சான்று திருத்தம், வெளிமாநில தொழிலாளர்கள் பதிவு சான்று திருத்தம் ஆகியவற்றுக்கும் இத்துறையின் இணையதளம் மூலமாக இதற்கான கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இணையதளம் மூலமாகவே ஒப்புதல் அளிக்கப்படும். சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, 0422 - 2645587, 2990069 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.