/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்கள் புகார் எதிரொலி தொழிற்சாலையை மூட உத்தரவு
/
பொதுமக்கள் புகார் எதிரொலி தொழிற்சாலையை மூட உத்தரவு
பொதுமக்கள் புகார் எதிரொலி தொழிற்சாலையை மூட உத்தரவு
பொதுமக்கள் புகார் எதிரொலி தொழிற்சாலையை மூட உத்தரவு
ADDED : மே 10, 2025 01:08 AM

அன்னுார்: தொழிற்சாலை மீது பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், தற்காலிகமாக மூட, ஆர்.டி.ஓ., உத்தரவு பிறப்பித்தார்.
கரியாம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலை நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என கிராம மக்கள், அன்னுார் தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து, நேற்று கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் சுவாமிநாதன், தாசில்தார் யமுனா, இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், 'காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும் என வருவாய் துறை உத்தரவு பிறப்பித்தும், அதையும் மீறி தொழிற்சாலையை இயக்குகின்றனர் .இதனால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர்,' என்றனர். தொழிற்சாலை தரப்பினர் கூறுகையில், 'ஒரு சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டுவிட்டது. மற்றுமொரு சுத்திகரிப்பு கருவியை வருகிற 15ம் தேதிக்குள் பொருத்தி விடுகிறோம். அதன் பின்னர் துர்நாற்றம் வராது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது,' என்றனர். இருதரப்பினரையும் விசாரித்த ஆர்.டி.ஓ., கோவிந்தன் கூறுகையில், 'வருகிற 15ம் தேதி வரை தொழிற்சாலையை இயக்கக் கூடாது. இரண்டு சுத்திகரிப்பு கருவியும் பொருத்திய பிறகு, ஏழு நாட்கள் தொழிற்சாலையை இயக்கி, அதன் பிறகு சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை தொழிற்சாலை இயங்காமல் காவல்துறை கண்காணிக்கும்,'' என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.