/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்சாலை துர்நாற்றம்; கிராம மக்கள் புகார்
/
தொழிற்சாலை துர்நாற்றம்; கிராம மக்கள் புகார்
ADDED : பிப் 16, 2025 11:29 PM
அன்னுார்; தனியார் தொழிற்சாலைகளில் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கரியாம்பாளையம் கிராமத்தில் இரண்டு தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இரண்டு தொழிற்சாலைகளில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தலைவலி, வாந்தி ஏற்படுகிறது. இது குறித்து கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு எழுத்து மூலமாக புகார் தெரிவித்தோம். எனினும் ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கிராம சபை கூட்டத்தில் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினோம். அதன்பிறகும் நடவடிக்கை இல்லை.
மாவட்ட நிர்வாகம் விரைவில் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க விட்டால் இப்பகுதியில் உள்ளோர் வேறு ஊருக்கு குடி மாறி செல்வதை தவிர வழியில்லை,' என்றனர்.

