/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை
/
போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை
ADDED : மே 08, 2025 12:47 AM
ஆனைமலை; ஆனைமலை மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த டிரைவர் ஜெயபால், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், பொள்ளாச்சியை சேர்ந்த ஏஜென்ட் சிவசங்கரிடம், வாகன இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பிக்க 21,989 ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு அவர், தனியார் ஜெனரல் இன்சூரன்ஸ் பெயரில் சான்றிதழை ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.
கடந்தாண்டு டிச., 15ம் தேதி அங்கலகுறிச்சி ஜே.ஜே., நகரில் நடந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்சூரன்ஸ் சரிபார்த்த போது, ஏற்கனவே வாகனத்தின் இன்சூரன்ஸ் முடிந்து விட்டதும், போலியானது என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில், ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலியாக இன்சூரன்ஸ் தயாரித்து மோசடி செய்தது குறித்து விசாரிக்கின்றனர்.