/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலத்தின் மீதிருந்து விழுந்த மின்கம்பம், இரும்பு பலகை
/
பாலத்தின் மீதிருந்து விழுந்த மின்கம்பம், இரும்பு பலகை
பாலத்தின் மீதிருந்து விழுந்த மின்கம்பம், இரும்பு பலகை
பாலத்தின் மீதிருந்து விழுந்த மின்கம்பம், இரும்பு பலகை
ADDED : பிப் 17, 2025 12:13 AM

கோவை; பாலத்தின் மீதிருந்து மின்கம்பம், இரும்பு பலகை விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கோவை சுங்கம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தில் நடந்த விபத்துகளில் சிக்கி, சிலர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாலத்தில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை, மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்கு ஒன்று பெயர்ந்து கீழே விழுந்தது. வாகனங்களின் பாதுகாப்புக்காக, பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தடுப்பு பலகையும் பெயர்ந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருந்தது. இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.