/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்முதல் விலை சரிவு; மரவள்ளி விவசாயிகள் தவிப்பு
/
கொள்முதல் விலை சரிவு; மரவள்ளி விவசாயிகள் தவிப்பு
ADDED : மே 29, 2025 11:48 PM

அன்னுார்; அன்னுார் வட்டாரத்தில், செம்மாணி செட்டிபாளையம், குருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. பெரும்பாலும் முள்ளுவாடி ரகம் பயிரிடப்படுகிறது. இது ஓரளவு வளர்ச்சியை தாங்கி வளரக்கூடியது.
இந்நிலையில் மரவள்ளியை வியாபாரிகள் மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து குருக்கம்பாளையம் விவசாயிகள் கூறுகையில், 'கரணை நடவு செய்து, உரம் இட்டு, தண்ணீர் பாய்ச்சி களை எடுத்து பத்து மாதங்கள் பாடுபட்டு இருக்கிறோம். ஒரு ஏக்கருக்கு சில தோட்டங்களில் 12 டன்னும் சில தோட்டங்களில் 15 டன்னும் விளைச்சல் கிடைத்துள்ளது. ஒரு கிலோ ஐந்து ரூபாய் 50 காசுக்கு தான் வியாபாரிகள் கேட்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. செலவு 10 மாதங்களில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகியுள்ளது. இதனால் வேலை செய்த கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை. பத்து மாத உழைப்பு வீணாகிவிட்டது.
அரசு, மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு ஏற்றுமதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க செய்ய வேண்டும்,' என்றனர்.