/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
/
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : நவ 21, 2024 09:46 PM

கோவை ; குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கிவைத்தார்.
கோவை மாவட்ட குடும்ப நலச்செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் ரேஸ்கோர்சில் உள்ள சுகாதார பணிகள் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியானது சி.எஸ்.ஐ., பள்ளி வரை சென்று நிறைவடைந்தது. விழிப்புணர்வு வாகனமானது பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்,மக்கள் கூடும் இடங்களில் நகர் வலம் சென்றது.
இதுகுறித்த விளம்பர கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும், இந்த இருவார விழாவினை முன்னிட்டு ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
குடும்பநல அறுவைசிகிச்சை ஏற்கும் ஆண்களுக்கு ரூ.3100 அன்பளிப்பு வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் குடும்பநலம் துணை இயக்குநர் கவுரி, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ராஜசேகரன், மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், குடும்பநல அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.